அருள்மிகு ஸ்ரீ
ஓரண்டியம்மன் கோயில்
வேளச்சேரியில் மிகவும் பழமையான கோயில். சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தைய ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் அம்மனுக்கு ஆடி மாதம் நான்காம் வாரம் திருவிழா நடைபெறும். திருவிழாவின் துவக்கநாள் ஆடி நான்காம் வாரம் புதன்கிழமை காலை படவட்டம்மனுக்கு காப்பு கட்டி, பூ அலங்கார கரகம் ஊர்வலம் வந்த பிறகு இரவு கலைக்கப்படும்.
அன்று இரவே ஓரண்டியம்மனுக்கு காப்புகட்டி ஐந்து நாள் பூ அலங்கார கரகம் ஊர் வலம் வரும். கரகம் ஊர்வலம் வரும்போது எல்லைக்கு எல்லை மெய்சிலிர்க்க வைக்கும் அம்மனின் ஆக்ரோஷ தாண்டவம் நடைபெறும்.
மேலும் படிக்கநூதன ஆலய அஷ்டந்தன புதிய கற்கோயில் மஹா கும்பாபிஷேக பத்திரிக்கை
நமது பூஜைகள்
ஸ்ரீ
ஓரண்டியம்மன்
தொண்டு அறக்கட்டளை
என்றும் பொங்கி பாயும் புது புனல் போன்றவளே!
வேண்டிவரும் அன்பர்களின் வேதனையை தீர்ப்பாளே!
கருவறையில் வீற்றிருந்து கருணைமழை பொழிபவளே!
தேடி வருபவர் துயர் தீர்த்து தேனாய் இனிப்பவளே!
அன்னையே அருள்மிகு ஓரண்டியம்மா தாயே!
எடுத்த செயலை இனிதென முடித்து தருபவளே!
நின் கமலபாதம் போற்றி போற்றி போற்றி!
நன்கொடை
அளியுங்கள்
ஒரு தன்னார்வலர் அல்லது ஸ்பான்சர் ஆக வேண்டும். பக்தர்கள் தங்கள் சேவையை வழங்குவதற்கான வாய்ப்பு வரவேற்கப்படுகிறது












